நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு, இலங்கை முழுவதும் உள்ள சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நீட்டிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இன்று (26) பிற்பகல் முதல் அமுலுக்கு வரும் வகையில், பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன:

இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை:

களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட
மாத்தறை மாவட்டம்: வெலிப்பிட்டிய
நுவரெலியா மாவட்டம்: கொத்மலை
இரத்தினபுரி மாவட்டம்: கலவான

முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை:

கொழும்பு மாவட்டம்: சீதாவக்க
காலி மாவட்டம்: யக்கலமுல்ல, பத்ஹேகம, நாகொட, எல்பிட்டிய
களுத்துறை மாவட்டம்: பாலிந்தநுவர, மதுகம
கண்டி மாவட்டம்: உடுநுவர
கேகாலை மாவட்டம்: தெஹியோவிட்ட
குருணாகலை மாவட்டம்: அலவ்வ
மாத்தறை மாவட்டம்: கொடபொல, பிடபெத்தர
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ

இரத்தினபுரி மாவட்டம்: குருவிட, பெல்மடுல்ல, எலபாத, எஹலியகொட, அயகம, நிவிதிகல, இரத்தினபுரி, கிரியெல்ல

இதேவேளை, நாட்டின் மலைப்பாங்கான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மண்சரிவு அபாயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

 

Share This