அடை மழை: பெருந்தோட்ட பகுதிகளில் இயல்பு நிலை ஸ்தம்பிதம்

அடை மழை: பெருந்தோட்ட பகுதிகளில் இயல்பு நிலை ஸ்தம்பிதம்

நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா உட்பட பல பகுதிகளிலும் நேற்றிரவு முதல் அடை மழை பெய்துவருகின்றது.

இதனால் பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப் பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் , விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன மழையுடன் எங்கு பார்த்தாலும் பனி மூட்டமும் நிலவுகின்றது. எனவே, சாரதிகள் அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் புசல்லாவை, கம்பளை உள்ளிட்ட பகுதிகளிலும் காலை முதல் மழை பெய்துவருகின்றது.

Share This