காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதல் திடக்கழிவு மறுசுழற்சி மையம்

இலங்கையின் முதல் திடக்கழிவு மறுசுழற்சி மையம் காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ளது.
‘clean srilanka’ திட்டத்தின் கீழ் முதல் திடக்கழிவு மறுசுழற்சி மையம் இலங்கையின் கிழக்கு கடற்கரையில் உள்ள காத்தான்குடியில் நிறுவப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த திட்டத்தை பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம், உள்ளூராட்சி நிறுவனங்களுக்குள் ஆரம்பித்துள்ளது.
இந்த மையங்கள் திடக்கழிவுகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களாக மாற்றுவதற்கான வசதிகளை வழங்கும் என்று தெரிவிக்கப்படட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய மறுசுழற்சி மையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாகவே, காத்தான்குடி நகரசபையின் மறுசுழற்சி மையத்தில் இந்த திட்டத்தின் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த திட்டத்துக்காக, மொத்தம் 54 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாகாணத்திலும் குறிப்பிடத்தக்க அளவு மக்காத கழிவுகள் உருவாகும் ஆறு இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.