ஐஸ் போதைக்கு அடிமையானவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

ஐஸ் போதைக்கு அடிமையானவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

2023ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகையில் 15-64 வயதுடைய சுமார் 316 மில்லியன் மக்கள் ஒரு முறையாவது போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள 2025 உலக போதைப்பொருள் அறிக்கையை சுட்டிக்காட்டி, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை
சபையின் தகவல் அதிகாரி சாமர கருணாரத்ன கூறுகிறார்.

‘போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில் சமீபத்தில் நடைபெற்ற சொற்பொழிவில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் போதைப்பொருள் பயன்பாடு 25 வீதம் அதிகரித்துள்ளது என்று கூறிய அவர், சுமார் 250 மில்லியன் மக்கள் கஞ்சாவைப் பயன்படுத்தியுள்ளதாகவும், 30 மில்லியன் பேர் ஆம்பெடமைன் வகையைச் சேர்ந்த மருந்துகளைப் பயன்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

2023 ஆம் ஆண்டில் ஆம்பெடமைன் பயன்பாடு அதிக அளவில் இருந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன என்றும், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்த அளவு அதிகமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டில் இலங்கையில் ஐஸ் போதைப் பொருள் குறித்து தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை நடத்திய ஆய்வில், மிகப்பெரிய குழு, அதாவது 38 வீதம், 22 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும், மொத்தக் குழுவில் 66 வீதம் பேர் 19-26 வயதுக்குட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This