எதிரணிகள் ஒன்றிணைவது நல்லது – இராதாகிருஷ்ணன்

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் ஓரணியில் திரண்டாதல் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
” எதிரணிகள் ஒன்றிணைவதற்குரிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செய்ய வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கப்படும்.
தவறிழைக்கப்பட்டால் நிச்சயம் அவற்றை எதிர்ப்போம். மக்கள் வாக்களிக்கும்வரை அரசியலில் ஈடுபடும் எண்ணத்துடன்தான் இருக்கின்றேன்.” – எனவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.