அரசாங்கத்தின் செயலற்ற தன்மையே சமூக பிரச்சினைகளுக்கு காரணம் – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் செயலற்ற தன்மையே சமூக பிரச்சினைகளுக்கு காரணம் – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கவலை வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் செயலற்ற தன்மை இந்த சமூகப் பிரச்சினைகளுக்கு பங்களித்துள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், இந்த ஆண்டு மோசடி செய்பவர்கள் ஊக்குவிக்கப்பட்ட ஆண்டு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் எந்த ஆய்வும் இல்லாமல் விடுவிக்கப்பட்ட சம்பவம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எனிவும், இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

323 கொள்கலன்களில் மோசடி செய்பவர்களுக்குச் சொந்தமான பொருட்களும் தேசிய பாதுகாப்பை பாதிக்கக்கூடிய பொருட்களும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த கொள்கலன்களை விடுவிப்பது மோசடி செய்பவர்களை விடுவிப்பதற்கு சமம் என்று திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share This