பலஸ்தீன அரசை அங்கீகரித்தமையால் மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க வேண்டாம் – பிரித்தானியா எச்சரிக்கை

பலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரித்ததற்கு பழிவாங்கும் வகையில் மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க வேண்டாம் என எச்சரித்துள்ளதாக பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவுடன் பிரான்ஸும் பலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று, மேலும் சில ஐரோப்பிய நாடுகளும் பலஸ்தீன அரசை அங்கீகரிக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பயங்கரவாதத்திற்கு மிகப்பெரிய வெகுமதி என விமர்சித்துள்ளார்.
மேலும் பலஸ்தீன என்ற ஒரு அரசு இயங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காசாவில் போர் நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இருஅரசு தீர்வு தொடர்பில் உலகத் தலைவர்கள் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.