மஹிபால ஹேரத்தின் ஹோட்டலை இடிக்க உத்தரவு

மஹிபால ஹேரத்தின் ஹோட்டலை இடிக்க உத்தரவு

வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத்திற்கு சொந்தமானதாக கருதப்படும் ஹோட்டலை இடிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மஹிபால ஹேரத் அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி தனது மனைவியின் பெயரில் பெரமியன்குளம் வனப்பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் 60 பேர்ச்சர்ஸ் காணியில் அமைந்துள்ள கட்டிடம் என்பவற்றை ஒரு மாதத்திற்குள் அகற்றுமாறு நுவரகம் பலாத்த பிரதேச செயலாளர் சுதர்சன திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைக்கமைய அனுராதபுரம் மாவட்டத்தில் காணப்படும் வனப்பகுதியின் எல்லை நிர்ணயத்தை நீர்ப்பாசனத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய பெரமியன்குளம் வனப்பகுதியை எல்லை நிர்ணயம் செய்யும் சந்தர்ப்பத்தில் எந்தவொரு சட்ட ஆவணங்களும் இன்றி அங்கு சட்டவிரோதமாக ஹோட்டல் அமைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

அதனை இடிக்குமாறு முன்னாள் ஆளுநரின் மனைவிக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

Share This