விமான நிலையத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 168.40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்றைய தினம் போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
422 கிராம் குஷ் மற்றும் 1 கிலோ 262 கிராம் நிறையுடைய ஹஷிஷ் போதைப்பொருட்களே இதன்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கழிப்பறையை சுத்தம் செய்த தொழிலாளி அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.