நாகப்பட்டினத்திற்கு விஜயம் நாளை சுற்றுப்பயணம்

நாகப்பட்டினத்திற்கு விஜயம் நாளை சுற்றுப்பயணம்

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதன்போது வருகை தரும் தொண்டர்களுக்கு 12 வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

முதியவர், பாடசாலை சிறுவர்கள், கர்ப்பிணி, கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள் விஜயின் பரப்புரைக்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின்விளக்கு கம்பங்கள், உயரமாக இடங்கள் மேலே ஏற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் அறிவுறுத்தல்படி அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு வருபவர்கள் பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ, நடந்து கொள்ளவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியின் இருபுறமும் பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள், கொடி கட்டப்பட்ட கம்பிகளை உரிய அனுமதியின்றி வைக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விஜயின் வருகையின்போது பட்டாசு வெடிப்பதை தோழர்கள் தவிர்க்குமாறும் தவெக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பொலிஸாரின் விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் எனவும் தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This