துனித் வெல்லாலகேவின் தந்தையின் மறைவுக்கு மகிந்த இரங்கல்

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் துனித் வெல்லாலகேவின் தந்தையின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் துனித் வெல்லாலகேவின் தந்தையின் மறைவு குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “எனது தந்தையின் இழப்பு எனக்கு 22 வயதாக இருந்தபோது நிகழ்ந்தது. அந்த நேரத்தில், நான் என் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தேன்.
ஆனால் 22 வயது இளைஞன் நீங்கள் நிறைய சாதித்துள்ளீர்கள். ஒரு சிலரே கனவுகளை நனவாக்கும் மகிழ்ச்சியை, தங்கள் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் அந்த ஒரு சிலரின் அதிர்ஷ்டசாலி மகன்.
வெற்றிபெறும்போது, அந்த வெற்றிக்காக நிறைய தியாகம் செய்த தமது அன்பான பெற்றோர் இல்லாதது எங்களை வருத்தப்படுத்துகிறது. நான் அதை அனுபவித்திருக்கிறேன்.
எனது வெற்றிகளை எதிர்கொள்ளும்போது என் பெற்றோரை என் இதயத்தில் நினைவு கூர்ந்தேன். ஆனால் நீங்கள் மிக இளம் வயதிலேயே உங்கள் பெற்றோருக்கு முன்னால் நிறைய சாதித்துள்ளீர்கள்.
தாய்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் இந்த நாட்டில் உள்ள அனைவரின் கனவுகளையும் நம்பிக்கைகளையும் நீங்கள் நிறைவேற்றுவது போல, உங்கள் தந்தையின் தந்தைவழி கனவை நீங்கள் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளீர்கள்.
உங்கள் தந்தையின் முன் தாய்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம், நீங்கள் முழு கிரிக்கெட் உலகையும் அனைத்து அம்சங்களிலும் வென்றுள்ளீர்கள்.
ஒரு தந்தையாக, உங்கள் தந்தையின் கனவை உயிர்ப்புடன் வைத்திருக்க நீங்கள் இதையெல்லாம் வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று நான் உங்களுக்கு அன்புடன் கூறுகிறேன்.
கிரிக்கெட்டை நேசிக்கும் நான் உட்பட இந்த நாட்டு மக்களின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களுடன் உள்ளது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்” என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.