க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக கோரப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைப் பாடசாலை அதிபர்கள் மூலமாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் இணையவழியாகவும் சமர்ப்பிக்க முடியும்.

தனியார் விண்ணப்பதாரர்கள் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்போது தங்கள் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள், தங்கள் பாதுகாவலர் (தாய் அல்லது தந்தை) இன் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

CATEGORIES
TAGS
Share This