மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்

மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி – பலாங்கொடை பிரதேசத்தில் பலாங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இரவுநேர சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என கூறப்படுகின்றது.

சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளிடமிருந்து ஒரு கிலோ 765 கிராம் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை நீதிமன்றி்ல ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This