ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (19) முற்பகல் 10 மணி முதல் நாளை (20) முற்பகல் 10 மணி வரை அமலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டம், சீதாவக்க, களுத்துறை மாவட்டம், இங்கிரிய, ஹொரணை, கேகாலை மாவட்டம், தெஹியோவிட்ட, நுவரெலியா மாவட்டம், கொத்மலை, இரத்தினபுரி மாவட்டம், இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share This