இடிந்து விழுந்த மந்திரி மனையை பார்வையிட்ட அமைச்சர் சந்திரசேகர்

யாழில் நேற்றைய தினம் (17) பெய்த கடும் மழையால் இடிந்து விழுந்த மந்திரி மனையை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
யாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளமை மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மந்திரி மனையின் திருந்த வேலைகள் தனி நபர் ஒருவரின் காணிக்குள் இருப்பதாகவும், அதனை பாதுகாக்க தாம் கோரிக்கை விடுத்தபோதும் குறித்த நபர் அதனை ஏற்கவில்லை எனவும் தொல்லியல் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய உதவிப்பணிப்பாளர் பந்துல ஜீவ விசனம் வெளியிடிருந்தமை குறிப்பிடத்தக்கது.