இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் காலமானார்

இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் காலமானார்

சகுனி திரைப்பட இயக்குநர் சங்கர் தயாள் காலமாகியுள்ளார்.

யோகிபாபு நடிப்பில் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் என்ற திரைப்படத்தை சங்கர் தயாள் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இத் திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக செல்லும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொளத்தூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அவரை அனுமதித்து பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

54 வயதான இவரின் மறைவு அனைவரையும் சோத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share This