கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வில் இன்று (16) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, இந்த பிரதிவாதிகளை பிணையில் விடுவிப்பதை சட்டமா அதிபர் எதிர்ப்பார் என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, பிரதிவாதிகளின் பிணை கோரிக்கை தொடர்பாக அவர்கள் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகள் தங்களின் வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This