நேபாளம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல்

நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார்.
நேபாளத்தில் கடந்த நான்காம் திபதி சமூக ஊடகங்களுக்க விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது.
இதில் 75 பேர் உயிரிழந்ததடன், 1300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். இதனை தொடர்ந்து நாட்டின் முழு பாதுகாப்பையும் அந்நாட்டு இராணுவம் பொறுப்பேற்றுக்கொண்டது.
நேபாளம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிரதமர் சர்மா ஒலி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பதவி விலகினர்.
நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, நாட்டின் இடைக்கால பிரதமராக பதவியேற்றார்.
இடைக்கால பிரதமர் சுசீலா தலைமையிலான நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ராம் சந்திரா கலைத்துள்ளார்.
செப்டம்பர் 12ஆம் திகதி முதல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
இவ்வாறான நிலையில், 2026ஆம் ஆண்டு மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல் நடைபெறும்என அந்நாட்டு ஜனாதிபதி ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம், ஜனநாயகத்துக்கு எதிரானது, அரசியலமைப்புக்கு விரோதமானது’ என்று முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.