அவசரப்பட்டு முடிவெடுக்கும் மூன்று ராசிக்காரர்கள்
வாழ்க்கையில் அவசரமாக நாம் எடுக்கும் முடிவுகள் நம்மை ஆபத்தில் சிக்க வைத்துவிடும். அந்த வகையில் எதிலும் அவசரப்படும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
மேஷம்
மேஷ ராசிக்காரரின் அடிப்படை குணமே கோபமும் அவசர புத்தியும் தான். இவர்களின் அதிபதியாக செவ்வாய் இருப்பதால் எதிலும் வேகம் மற்றும் ஆற்றலுடன் செயலாற்றுவார்கள். ஆனால்,இதுவே இவர்களுக்கு பாதகத்தையும் ஏற்படுத்தலாம்.
மிதுனம்
இவர்களின் ராசி அடையாளத்தைப் போலவே இவர்களின் சிந்தனையும் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அவசரமாக செயல்படுவார்கள். அதனால் அது தவறாக வாய்ப்புண்டு. எனவே நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
தனுசு
சாகச மனப்பான்மையுடைய தனுசு ராசிக்காரர்கள், பின்விளைவுகளை கணக்கில் கொள்ளாமல் திடீர் முடிவுகளை எடுப்பார்கள். வாழ்வில் முன்னேற்றம் காண சரியாக சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.