விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை (13) காலை 09.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

பின்னர் இந்தியாவின் மதுரை நோக்கி பயணிப்பதற்காக விமான நிலையத்தின் வருகை முனையத்தில் காத்திருந்தார்.

இதன்போது குறித்த இந்திய பிரஜையின் பயணப்பை சந்தேகத்திற்கிடமானது என கண்டறிந்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள், சோதனை மேற்கொண்டர்.

இதன்போது 8.542 கிலோகிராம்  நிறையுடைய குஷ் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

சென்னையை சேர்ந்த 33 வயதான நபரே கைது இவ்வாறு செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

 

Share This