60 ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்படும் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம்

பல தசாப்தங்களுக்குப் பிறகு, கொழும்பில் உள்ள புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிக்க தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
60 ஆண்டுகளுக்குப் பின்னர் பேருந்து நிலையம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. புதுப்பித்தலுக்கான செலவு 424 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
புறக்கோட்டைக்கு வருகை தரும் மக்களுக்காக புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது, இங்கிருந்து நாளாந்தம் 1,500க்கும் மேற்பட்ட பேருந்து வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையம், பல தசாப்தங்களாக முறையான பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து காணப்பட்டது.
இதற்கு தீர்வு காணும் நோக்கில், நாட்டில் 50 பேருந்து நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தை தொடங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் கீழ், புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் நாளை (15ஆம் திகதி) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விமானப்படை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டவுள்ளது.
புதிய திட்டத்தின் கீழ், பேருந்து நிலையத்தில் புதிய கழிப்பறைகள், தகவல் மற்றும் தகவல் தொடர்பு நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்பட உள்ளன.
புதுப்பிப்பு பணிகளுக்கு தயாராகும் வகையில் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், பேருந்து நிலையத்தின் நவீனமயமாக்கல் தொடர்பாக பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்திருந்த கடைகளும் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன.