பிரித்தானியாவில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சீக்கியப் பெண்

பிரித்தானியாவில்  கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சீக்கியப் பெண்

பிரித்தானியாவில் 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

ஓல்ட்பரி நகரில் கடந்த செவ்வாய்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இனவெறித் தாக்குதல்களுக்கும் அந்த பெண் உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் அந்த பெண்ணிடம் உன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள் என கூறியுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக முறைப்பாடளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தை கண்டித்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் பிரீத் கவுர் சமீப காலமாக இனவெறி அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது என கூறியுள்ளார்.

Share This