யாழில் போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞர் கைது

யாழில் போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞர் கைது

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 20 வயது இளைஞர் ஒருவர் 40 போதை மாத்திரைகளுடன் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸா ர் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This