முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 2024 இல் எவ்வளவு செலவானது?

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குதல் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் விதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் செலவினங்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
இந்தநிலையில், கடந்த வருடத்தில் மாத்திரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 9 கோடியே 85 இலட்சத்து 48 ஆயிரத்து 839 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றில் தெரிவித்தார்.
சட்ட விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.