போலந்து வான்வெளிக்குள் நுழைந்த ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக போலந்து பிரதமர் தெரிவிப்பு

போலந்து வான்வெளிக்குள் நுழைந்த ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக போலந்து பிரதமர் தெரிவிப்பு

 மேற்கு உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலின்போது, ஒரே இரவில் 19 ரஷ்ய ட்ரோன்கள் போலந்து வான்வெளிக்குள் நுழைந்ததாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

இதன்போது நான்கு ட்ரோன்கள் போலந்து மற்றும் நேட்டோ விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இது போலந்தை நோக்கிய முதல் நேரடி ட்ரோன் தாக்குதல் என்றும் கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும், பெரும்பாலான விமான நிலையங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, போலந்து வான்வெளியில் ட்ரோன்கள் இருந்ததாக வெளியான தகவலை, ஆதாரமற்றது என ரஷ்ய தூதுவர் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த  நடவடிக்கை, உக்ரைனில் ஒரே இரவில் ரஷ்யா ஏவிய 415 ட்ரோன்கள் தாக்குதலின் ஒரு பகுதியென  உக்ரைன் ஜனாதிபதி வோலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதன்போது சுமார் 08 ஸ்ட்ரைக் ட்ரோன்கள் போலந்தை நோக்கி இலக்கு வைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் ஐரோப்பாவிற்கு மிகவும் ஆபத்தான முன்னுதாரணம்  உக்ரைன் ஜனாதிபதி வோலொடிமிர் ஜெலென்ஸ்கி  எச்சரித்துள்ளார்.

Share This