2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிட அனுமதி

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிட அனுமதி

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்கள்/பாட அலகுகளில் 40% சதவீதமானவை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு அச்சிடுவதற்காக 2025.06.16 அன்று அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதற்கு மேலதிகமாக, மேலும் 366 பாடப் புத்தகங்கள்/பாட அலகுகள் இற்கான 27.12 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட வேண்டியுள்ளது.

அதற்கமைய, தேசிய போட்டி விலைமனு முறைமையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 29 நிறுவனங்கள் விலைமனுக்களைச் சமர்ப்பித்துள்ளன.

அதற்கமைய, உயர்மட்ட பெருகைக் குழுவின் விதந்துரைகளுக்கமைய, 3,491,47 மில்லியன் ரூபாய்கள் செலவில் குறித்த 29 நிறுவனங்கள் மூலம் 366 பாடப் புத்தகங்கள்/பாட அலகுகளின் 25.49 மில்லியன் பிரதிகளை அச்சிட்டுப் பெற்றுக்கொள்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share This