
50 ஆவது நாளில் காலடி எடுத்துவைத்த அமரன்…தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – சாய்பல்லவி இணைந்து நடித்த திரைப்படம் அமரன்.
மறைந்த தமிழக இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப் படம் ஒக்டோபர் 31 ஆம் திகதி வெளிவந்தது.
இப்படம் இதுவரையில் சுமார் 350 கோடி வசூலித்துள்ளது.
இந்நிலையில் இத் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகின்றன.
இது தொடர்பில் தயாரிப்பு நிறுவனம் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளது.
CATEGORIES சினிமா
