முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் தொடர்பில் வெளியான தகவல்

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய 50 உத்தியோகபூர்வ இல்லங்களை எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் அல்லது பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களை அரச நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் நேற்று கொழும்பில் உள்ள மலலசேகர மாவத்தை மற்றும் கெப்பட்டிபொல வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஆய்வு செய்துள்ளனர்.
இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.