புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்பரிசீலனை விண்ணப்பத் திகதி வெளியானது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், விடைத்தாள்களை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 09ம் திகதி முதல் 22ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்தி பயிலும் பாடசாலையின் அதிபரினால், பாடசாலைக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ என்ற இணையத்தளத்தில் SCHOOL LOGIN இல் உள்நுழைந்து மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.