விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 20 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பயணப்பொதியொன்றிலிருந்து 20 கோடி ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பயணப்பொதியிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் நிறை 20.9 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்திலிருந்து வருகை தந்த பயணி ஒருவரால் இந்த போதைப்பொருள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் 53 வயதுடையவர் என்றும், பின்னர் அவர் கிராண்ட்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.