எல்ல-வெல்லவாய விபத்து!!! 14 பேரின் இறுதிச் சடங்குகள் இன்று

எல்ல-வெல்லவாய சாலையில் ஏற்பட்ட பேருந்தில் உயிரிழந்த 14 பேரின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன.
உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களின் வீடுகளில் வைக்கப்பட்டுள்ளன, தங்காலை நகராட்சி மன்றம் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி துணை அமைச்சர் ருவான் செனரத், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
அதிகப்படியான வேகம், அலட்சியம் மற்றும் இயந்திரக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யத் தவறியதே விபத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முதற்கட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்திருந்த நிலையில், 17 பேர் படுகாயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்தில் 32 பேர் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.