கிரேன்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு கிரேன்பாஸ் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். களனி பகுதியைச் சேர்ந்த 26 வயது நபர் இதில் உயிரிழந்துள்ளார். மஹவத்த கடிகார தூணிற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளார்.