புலமை பரிசில் பரீட்சை – வவுனியா மாணவர்கள் சாதனை

தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் 75 பேர் சித்தி.
புலமைப்பரீட்சை பெறுபேறுகள்நேற்று இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலான பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இம்முறை 165 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் 159மாணவர்கள் 70 க்கும் அதிகமான புள்ளிகளை பெற்று சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறம்பைக்குளம் மகாவித்தியாலத்தில் 76பேர் சித்தி.
புலமைப்பரீட்சை பெறுபேறுகள்நேற்று இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயத்தில் 76 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலான பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் புலமைப்பரீட்சைக்கு இம்முறை 154மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் 149 மாணவர்கள் 70 க்கும் அதிகமான புள்ளிகளை பெற்று சிறந்தபெறுபேற்றினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.