HIV தொற்று அதிகரிப்பு

நாட்டில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தற்போது எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் மொத்தம் 230 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி 2025 ஆம் ஆண்டின் முதற்பகுதியில் பதிவான தொற்றாளர்களில், 30 ஆண்களும் இரண்டு பெண்களும் 15–24 வயதுக்குட்பட்டவர்கள் என்பதோடு மீதமுள்ள தொற்றாளர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் எச்.ஐ.வி எய்ட்ஸ் தொடர்பாக 10 இறப்புகள் பதிவாகியுள்ள அதேவேளை 2024 ஆம் ஆண்டில், மொத்தம் 47 பேர் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் இலங்கை கடந்த ஆண்டில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான எச்.ஐ.வி பரிசோதனைகளை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.