ஷங்ரிலா ஹோட்டலில் நடந்த சந்திப்பு – சஜித், பிமல், சுனில் பேசியது என்ன?

ஷங்ரிலா ஹோட்டலில் நடந்த சந்திப்பு – சஜித், பிமல், சுனில் பேசியது என்ன?

கத்தார் அரச தேசிய தினத்தை முன்னிட்டு ஷங்ரிலா ஹோட்டலில் கடந்த வாரம் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அரச தரப்பின் சார்ப்பில் அமைச்சர்களாக பிமல் ரத்னாநாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் கலந்துகொண்டதுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டார்.

நிகழ்வில் சஜித் பிரேமதாசவுக்கு வலது, இடது புறத்தில் அமைச்சர்களாக பிமல் ரத்னாநாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோருக்கு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

நிகழ்வின் ஆரம்பம் முதலே மூவருக்கும் இடையில் சிநேகப்பூர்வமான உரையாடல் இடம்பெற்றுள்ளதுடன், இந்த உரையாடலில் சமகால அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து மூவரும் பேசியுள்ளனர்.

சபாநாயகர் விவகாரம், அரிசி விவகாரம் தொடர்பில் மூவரும் உரையாடியுள்ளதுடன்,  சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசித்துள்ளனர். குறிப்பாக  சிரியப் பிரச்சினை, இஸ்ரேலியப் பிரச்சினை குறித்து மூவருக்கும் நீண்ட உரையாடல் நடத்தயுள்ளதாக தெரியவருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )