கச்சத்தீவுக்குச் சென்ற ஜனாதிபதி

கச்சத்தீவுக்குச் சென்ற ஜனாதிபதி

யாழ்ப்பாணத்துக்கு இன்று(01.09.2025) காலை வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மாலை கச்சதீவுக்கும் அவசர பயணம் மேற்கொண்டார்.

வடக்குக்கு இரு நாள் பயணமாக இன்று வருகை தந்த ஜனாதிபதி, மாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறையில் இருந்து கடற்படையினரின் 4 படகுகளில் கச்சதீவுக்கும் பயணமானார்.

கச்சதீவைப் பார்வையிட்ட ஜனாதிபதி மாலை 6 மணிக்கு மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இதேவேளை, தமிழகத்தில் அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய் அண்மையில் கச்சதீவை மீளப் பெறவேண்டும் என்ற சர்ச்சைக்குரிய பேச்சின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார கச்சதீவுக்குப் பயணித்தமை அரசியல் ரீதியில் பெரிதும் பார்க்கப்படுகின்றது.

இவ்வாறிருக்க, யாழ்ப்பாணத்தில் இன்று ஒரு நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, “கச்சதீவு இலங்கைக்குரியது. அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” – என்று வலியுறுத்திக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This