சீதை அம்மன் கோவிலுக்குச் சென்ற பிரித்தானிய தூதுவர்

சீதை அம்மன் கோவிலுக்குச் சென்ற பிரித்தானிய தூதுவர்

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் எண்ட்ரூ பெட்ரிக் இன்று (28) காலை நுவரெலியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சீதா எலிய ஸ்ரீ சீதை அம்மன் கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார்

பிரித்தானிய அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான உறவுகள் மூலம் மலையக மலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து ஆராயவும், நுவரெலியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திற்கு கள விஜயமொன்றை பிரித்தானிய தூதுவர் இன்று காலை விஜயம் ஒன்றை மேற்கொண்டார்

நுவரெலியா சீதை அம்மன் கோவிலுக்கு வந்த உயர் ஸ்தானிகரை, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கோவில் அறங்காவலர் குழுவின் தலைவருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழுவின் செயலாளர் சிவா குணசேகரம் ஆகியோர் வரவேற்றனர், மேலும் சிறப்பு ஆசீர்வாத பூஜையில் பங்கேற்று கலந்து கொண்டார்

பூஜையைத் தொடர்ந்து, பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சீதை அம்மன் கோயிலின் வரலாறு, தொன்மை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அங்கு வந்திருந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் உரையாடலில் ஈடுபட்டார்.

இதன் பின்னர், கோயிலுக்கு வருகை தரும் இராஜதந்திரிகளின் குறிப்பேட்டில் உயர் ஸ்தானிகர் ஒரு சிறப்பு குறிப்பை எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )