கை விலங்குடன் முதலைகள் நிறைந்த நீர்நிலையில் குதித்த நபர் – போராடி மீட்ட பொலிஸார்

மில்லெனிய பகுதியில் நடந்த ஒரு கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர், முதலைகள் நிறைந்த ஆழமான நீர்நிலையில் குதித்து தப்பிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த நபரின் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு சந்தேக நபர் கடை ஒன்றுக்குள் நுழைந்து கொள்ளையிட முயன்றுள்ளார். எனினும், கடை உரிமையாயளர் உரிமையாளரை கடுமையாக எச்சரித்து எதிர்கொண்டுள்ளார்.
எனினும் சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் உரிமையாளரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
காயமடைந்த கடை உரிமையாளர் முதலில் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், மில்லெனிய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ய இன்று காலை நடவடிக்கை எடுத்திருந்தனர். இதன்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மோட்டார் சைக்கிளில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும், தனக்கு போடப்பட்டிருந்த கைவிலங்கை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை ஓட்டச்சி சென்ற பொலிஸ் அதிகாரியில் கழுத்தை இறுக்கி அங்கிருந்து தப்பியோட முயற்சிசெய்துள்ளார்.
இதன்படி, கொஸ்கஹவல என்ற இடத்தில் உள்ள முதலைகள் நிறைந்த நீர்நிலையில் சந்தேகநபர் குதித்துள்ளார்.
எவ்வாறாயினும், பொலிஸாரின் பெரும் முயற்சிக்குப் பிறகு, சந்தேக நபர் நீர்நிலையில் இருந்து மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.