அரசியல் பழிவாங்கல்களை கையாள்வதற்காக சட்டக் குழு – எதிர்க்கட்சிகள் முடிவு

அரசியல் பழிவாங்கல்களை கையாள்வதற்காக சட்டக் குழு – எதிர்க்கட்சிகள் முடிவு

அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களை கையாள்வதற்காக ஒரு சட்டக் குழுவை நியமிக்க முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் ஒன்றுக் கூடிய எதிர்க்கட்சிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.

குழுவை ஒருங்கிணைக்கும் தலைமை பொறுப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடியிடம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லசந்த அழகியவண்ண மற்றும் சமன் ரத்னபிரிய ஆகியோர் குழுவின் உறுப்பினர்களபக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Share This