இந்திய நாடாளுமன்ற செயல்பாடுகள் பற்றி அறிந்துக்கொள்ள 25 பேர் கொண்ட எம்.பிகள் குழு இந்தியா பயணம்

அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையிலான 25 எம்.பி.க்கள் குழு, ஆய்வுச் சுற்றுலாவிற்காக இந்தியாவிற்கு சென்றுள்ளது.
இந்தக் குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும், நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் வழக்கறிஞர் ஹன்சா அபேரத்ன உட்பட பல அதிகாரிகளும் அடங்குவர்.
இந்திய நாடாளுமன்றம் தொடர்பான ஆய்வுச் சுற்றுலாவிற்காக இந்தக் குழு சென்றுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசாங்கக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு அண்மையில் சீனாவிற்கு ஆய்வுச் சுற்றுலா சென்றமை குறிப்பிடத்தக்கது.