பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பினால் இனி சட்ட நடவடிக்கை – அதிகபட்சமாக 25ஆயிரம் அபராதம்

பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பினால் இனி சட்ட நடவடிக்கை – அதிகபட்சமாக 25ஆயிரம் அபராதம்

இன்றுமுதல் வெற்றிலை உண்டு பொது இடங்களில் எச்சில் உமிழும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் பஸ் தரிப்பிடங்கள், பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிலை எச்சில்களை அதிகமாக காணக்கூடியதாக உள்ளது.

இதுகுறித்து பொது மக்கள் தொடர்ச்சியாக பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட உரிய அரச நிறுவனங்களுக்கு முறைப்பாடுகளை அளித்து வந்தனர்.

என்றாலும், இந்த விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளும் கடந்தகாலத்தில் எடுக்கப்படவில்லை.

தற்போதைய அரசாங்கம் பொது இடங்களில் வெற்றிலை உண்டு எச்சில் உமிழ்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது.

இன்றைய தினம் கம்பஹா பொது பஸ் தரிப்பிடம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் இதுகுறித்து பொது சுகாதார பரிசோதகர்களால் விழிப்புணர்வூட்டும் செயல்பாடுகள் இடம்பெற்றன.

வெற்றிலை எச்சிலை பொது இடங்களில் உமிழும் நபர்களுக்கு எதிராக குறைந்தப்பட்டசம் 3ஆயிரம் ரூபாவும் அதிகபட்சமாக 25ஆயிரம் ரூபாவும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பாக பஸ் சாரதிகள், வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்தும் போது வெற்றிலை எச்சரிலை பாதைகளில் அதிகமாக உமிழ்ந்து செல்வாக பொது சுகாதார பரிசோதகர்கள் கூறியதுடன், இவர்களுக்கு கடும் எச்சரிக்யையும் விடுத்தனர்.

பயணிகள் உட்பட பாதசாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. விரைவில் சட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.

Share This