ஹரிணி ரணிலை சந்தித்தாரா?

ஹரிணி ரணிலை சந்தித்தாரா?

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க நான் சிறைக்குச் சென்றிருந்தால், நான் சென்றதை ஊடகங்கள் நிரூபிக்க வேண்டும். பிரதமராக, நான் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியாது. ஆனால், ரகசியமாக செல்ல முடியாது. நான் சென்றதை நிரூபிக்குமாறு ஊடகங்களுக்கு சவால் விடுகிறேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பொய்யான செய்திகளைப் பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வதந்திகளை செய்தியாக்கி ஆதாரமற்ற கதைகளை நிரூபிக்காதீர்கள். நீங்கள் செய்திகளை உருவாக்கினால், அதற்கு ஒரு அடிப்படை இருக்க வேண்டும், 50 பேர் அரசாங்கத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்று கூறுகின்றீர்கள். யார் வெளியேறுகிறார்கள் என்று சொல்லுங்கள்.

நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம். நாங்கள் சட்டத்தில் செல்வாக்கு செலுத்த மாட்டோம். சட்டத்தின்படி செயல்படுவோம் என்று பிரதமர், ஊவா மாகாண ஊடகவியலாளுடனான சந்திப்பில் கூறியுள்ளார்.

Share This