வடக்கில் புதிய கூட்டு – சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம்

வடக்கில் புதிய கூட்டு – சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம்

செம்மணி புதை ஒழிக்கு நீதி கோரி எதிர்வரும் 29ஆம் திகதி முதல் வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் இணைத்தளவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கில் இருக்கின்ற அனைவரிடமும் கையெழுத்துக்களை பெற்று சர்வதேச நீதி விசாரணை என்பது தேவை என்பதை வலியுறுத்தி சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.

இதற்கு முன்னர் ஐநா சபைக்கு பல்வேறுபட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டு இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களின் கோரிக்கைகளாக நாங்கள் இந்த விடயத்தினை முன்வைக்க விரும்புகின்றோம்.

அத்துடன், ஆரம்ப கட்டமாக ஒரு கையெழுத்து போராட்டம் ஒன்றினை வடகிழக்கில் மேற்கொள்வதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளது.

அதுபோல இலங்கை தமிழரசு கட்சியிடமும், தமிழர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமும் பேசியிருந்தோம் அவர்கள் அதற்கு ஆதரவளித்திருக்கின்றார்கள்.

எனவே அனைவரும் இணைந்து ஒரு பொதுவான தமிழ் மக்கள் சம்பந்தமான பிரச்சினை என்ற விடயத்தில் ஒன்று திரண்டு போராட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது

அதேபோல முன்னணியினரும் சில திருத்தங்களுடன் கையெழுத்துப் போராட்டத்தில் இணைவதாக தெரிவித்துள்ளார்கள்.

எனவே எதிர்வரும் பத்து நாட்களுக்குள் இந்த கையெழுத்து போராட்டத்தை மேற்கொண்டு மக்களிடம் வையொப்பங்களை பெற்று உரிய தரப்பிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வராசா கஜேந்திரன், முருகேசு சந்திரகுமார், மற்றும் எம்.ஏ.சுமந்திரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளி கட்சியின் பிரதிநிதி வேந்தன் ஆகியோர்கலந்து கொண்டனர்.

Share This