இஸ்ரேலின் கோரமுகம் – சர்வதேச ஊடங்கள் தகவல்

பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலை மிகப்பெரிய அளவை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், குழந்தைகள் உட்பட எட்டு பேர் உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுத் தடைகள் காரணமாக காசா பகுதியில் குழந்தைகள் உட்பட சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இருப்பினும், 2023 முதல், இஸ்ரேலிய தாக்குதல்களில் சுமார் 70,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
குழந்தைகளை குறிவைத்து தாக்குதல்கள் தற்போது கொடூரமான முறையில் நடைபெற்று வருவதாகவும் சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.