தடமில்லாமல் மறைந்த ‘அமெரிக்கா’ கட்சி – மஸ்க் மௌனம்

கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட வரி குறைப்பு மற்றும் செலவு சட்டத்தை கடுமையாக எதிர்த்த உலகின் முதல்தர பணக்காரர் எலான் மஸ்க், டிரம்ப் உடனான நட்பை முறித்துக்கொண்டார்.
அந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட உடனேயே, புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார்.
“இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பித் தர ‘அமெரிக்கக் கட்சி’ உருவாக்கப்பட்டது என்று அறிவித்தார். ஊழல் மற்றும் ஊதாரித்தனத்தால் நாடு திவாலாகிறது. நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம், ஜனநாயகத்தில் அல்ல” என்று கடுமையான கூறியிருந்தார்.
2026 இடைக்காலத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்பதையும் மஸ்க் அப்போது தெரிவித்திருந்தார்.
ஆனால் சமீபத்திய காலங்களாக மௌனமாக இருக்கும் மஸ்க் வர்த்தகத்தில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் குடியரசு கட்சியின் எதிர்கால வாரிசாகக் கருதப்படும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுடன் மஸ்க் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
2028 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக ஜே.டி. வான்ஸை ஆதரிக்க மஸ்க் ஆர்வமாக உள்ளார் என அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2024 தேர்தலில் டிரம்ப் மற்றும் பிற குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மஸ்க் 300 மில்லியன் டொலர்களை செலவிட்டமை குறிப்பிடதக்கது.