ரஷ்யாவுக்கு உளவு பார்த்தவர் நியூசிலாந்தில் கைது

ரஷ்யாவுக்கு உளவு பார்த்தவர் நியூசிலாந்தில் கைது

ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை நியூசிலாந்து இராணுவ சிப்பாயொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரிந்தது.

நியூசிலாந்து நாட்டின் இளம் இராணுவ சிப்பாயொருவர், எதிரிநாட்டுக்கு உளவு பார்ப்பதாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இராணுவ உளவுப்பிரிவில் பணிபுரிந்து வந்த அவர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

அவர் கடந்த 2020-ம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து சேவையாற்றி வருவதாகவும், அவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த ரஷ்ய பெண் மூலமாக நியூசிலாந்து நாட்டின் இராணுவ ரகசியங்கள் மற்றும் முக்கிய தளவாட அமைப்புகள் அமைந்துள்ள இடங்கள் குறித்து ரஷியாவுக்கு தகவல்களை அவர் கசியவிட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு 7 முதல் 10 ஆண்டுகள்வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரியவருகின்றது.

Share This