மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

” மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்தி, மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரங்களைக் கையளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,
” நாடாளுமன்றம் செயற்படுகின்றது, ஜனாதிபதி உள்ளார், அமைச்சரவை இருக்கின்றது. எனவே, மாகாணசபை அவசியமா என மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய தனிநபர் சட்டமூலத்தை நான் முன்வைத்துள்ளேன். இதனை அரசாங்கம் ஏற்று, தமது சட்டமூலமாக கொண்டுவந்தால் விரைவாக தேர்தலை நடத்தலாம்.
இவ்வருட இறுதியில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் அடுத்த வருடம் நடுப்பகுதியில்தான் நடக்கும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மாகாணசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும்? பழைய முறைமையில் நடத்தப்படுமா? தேர்தல் பற்றி அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதை பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சிசபை அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெளிவுபடுத்த வேண்டும்.” – என்றார்.