காசா நகரைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்

காசா நகரைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைக்காக சுமார் 60,000 பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த சில நாட்களாக குறித்தப் விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 நாள் போர் நிறுத்தம் மற்றும் காசாவில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளில் பாதி பேரை விடுவிப்பதற்கான முன்மொழிவுக்கு ஹமாஸின் பதிலை இஸ்ரேல் ஆய்வு செய்து வரும் நிலையில் இந்த உறுதிப்படுத்தல் வந்துள்ளது.
பாலஸ்தீன பிரதேசத்தின் மையப்பகுதியில் உள்ள காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான புதிய தாக்குதலுக்கான திட்டங்களை இஸ்ரேல் அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் புதிய உத்வேகத்தைப் பெற்றன.
அமெரிக்க ஆதரவுடன் கூடிய போர்நிறுத்தத் திட்டம் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை எகிப்து மற்றும் கத்தார் முன்வைத்துள்ளன.
ஹமாஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 200 பாலஸ்தீனியர்களையும், குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறார்களையும் விடுவிப்பது, அதற்கு ஈடாக காசாவில் இருந்து உயிருடன் உள்ள பத்து பணயக்கைதிகளையும் இறந்த 18 பணயக்கைதிகளையும் விடுவிப்பது ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும் என்றார்.
இரண்டு எகிப்திய பாதுகாப்பு வட்டாரங்கள் இந்த விவரங்களை உறுதிப்படுத்தின, மேலும் நூற்றுக்கணக்கான காசா கைதிகளை விடுவிக்க ஹமாஸ் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் மொத்தம் 50 பணயக்கைதிகள் இருப்பதாகவும், அவர்களில் 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமைச்சரவை நிறுவிய கொள்கைகளின்படி, 50 பணயக்கைதிகளையும் விடுவிக்க இஸ்ரேல் கோருகிறது.
ஹமாஸின் இறுதி தீர்க்கமான கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம், எந்த பணயக்கைதியையும் விட்டுவிட மாட்டோம்” என்று இஸ்ரேலிய அரசியல் வட்டாரம் நேற்று தெரிவித்தது.
போர் நிறுத்த முன்மொழிவு குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரைவில் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டதாக இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹமாஸ் தலைமையிலான போராளிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து 1,200 பேரைக் கொன்று 251 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தபோது போர் தொடங்கியது.
இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து 62,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேலிய தாக்குதல் காசாவை ஒரு மனிதாபிமான நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளதுடன், அதன் மக்களில் பெரும்பாலோரை இடம்பெயர செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.