பேலியகொடையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பலி

பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
அடையாளம் தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.