இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் – ஜீவன் தொண்டமான் இடையே சந்திப்பு

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் – ஜீவன் தொண்டமான் இடையே சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் (கேரளா) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், நேற்று (16) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

தற்போது வெளியுறவுக் குழுவின் தலைவராகப் பணியாற்றி வரும் சஷி தரூரின் கருத்துக்கள் மற்றும் அரசியல் அனுபவங்கள் தொடர்பிலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது புகழ்பெற்ற இலக்கியப் பொக்கிஷமான Our Living Constitution இன் கையொப்பமிடப்பட்ட பிரதியை பெற்றுக்கொண்டதிலும் மகிழ்ச்சியென கூறியுள்ளார்.

மேலும், சிறந்த அரசியல்வாதி, சிந்தனையாளர், எழுத்தாளர் எனப் பல பரிமாணங்களில் விளங்கும் சஷி தரூரின் பணி எப்போதும் ஊக்கமளிக்கும் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )